tn govt schemes whatsapp channel தமிழக அரசின் திட்டங்களை அறிந்திட தானி வாட்ஸப் சேனல் முழு விவரம்

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் புதிய கட்செவி (Whatsapp) சேனல் தொடங்கப்பட்டுள்ளது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைத் தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது.

பொதுமக்கள் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு பயனடையத் துணைபுரியும் வகையில் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் Facebook, Instagram. Twitter. மற்றும் Youtube போன்றவற்றில் பக்கங்கள் தொடங்கி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதன் அடுத்த கட்ட முன்னெடுப்பாக அதிகாரபூர்வ கட்செவி (Whatsapp) சேனல் “TNDIPR, Govt of Tamil Nadu” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட துலங்கல் குறியீடு (QR Code) ஸ்கேன் செய்யவும்.
மேலும் தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் மேற்கண்ட சமூக வலைதள பக்கங்களை காண சிறிய அளவில் கொடுக்கப்பட்டுள்ள துலங்கல் தெரிவிக்கப்படுகிறது. குறியீட்டை ஸ்கேன் செய்யுமாறு கேட்டு கொள்கின்றோம்.
வாட்ஸப் லின்ங் இதோ இங்கு கிளிக் செய்யவும்