TamilNadu NewsIMPORTANT NEWS

tneb new tariff ஜூலை 1 முதல் உயர்ந்த மின்கட்டணம் யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் முழு விவரம்!

ஜூலை 1 முதல் உயர்ந்த மின்கட்டணம் யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் முழு விவரம்!

tneb new tariff
tneb new tariff

தமிழ்நாட்டில் 4.83 % மின்கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு முழு விவரம்

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தாமாகவே முன் வந்து வழங்கிய, கட்டண திருத்த ஆணை எண்.6 15.7.2024 படி, 2024 ஆண்டிற்கான மின்சார கட்டண திருத்தம், 1.7.2024 முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் ,விவசாயம்,கைத்தறி,விசைத்தறி, வழிபாட்டுத்தலங்கள், தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி

0 முதல் 400 கிலோ வாட் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ.4.60 லிருந்து ரூ.4.80 ஆக உயர்வு

401 முதல் 500 கிலோ வாட் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ. 6.15லிருந்து ரூ.6.45 ஆக உயர்வு

501 முதல் 600 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹8.15ல் இருந்து ₹8.55ஆக உயர்வு.

601 முதல் 800 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹9.20ல் இருந்து ₹9.65ஆக உயர்வு

801 முதல் 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹10.20ல் இருந்து ₹10.70ஆக உயர்வு.

1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இனி ₹11.80 வசூலிக்கப்படும்.

இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் வீடுகளுக்கான 100 யூனிட்கள் வரைமற்றும் குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

சிறு குறு தொழில் நுகர்வோர்களுக்கு யூனிட்டுக்கு 20 பைசா உயர்வு.

வணிக நுகர்வேர்களுக்கு மாதத்திற்கு ரூ.15/- ஆக உயர்வு.

தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றிக்கு 35 காசு ஆக உயர்வு.

tneb new tariff

More Details Click Here

Related Articles

Back to top button