tnpsc group 2 result குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12 ஆம் தேதி வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
tnpsc result group 2 குரூப் 2 தேர்வு முடிவுகள்
tnpsc group 2 result
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
Evaluation of Answer Booklets has been expedited so as to declare the results of the Group-II Examination on 12th January 2024
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிக்கை குரூப்-2 தேர்வு முடிவுகள் 2024 ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும்.விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-II தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் உள்ளதாகக் குறிப்பிட்டு வெளியான செய்திகள் குறித்து பின்வரும் விவரங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன. 15:12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம், 2023 ஆம் ஆண்டில் 15.03.2023 அன்று மேம்படுத்தப்பட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளயிடப்பட்டது. தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி 2023 ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் (14 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் 20 இலட்சம் தேர்வர்கள் (தோராயமாக) கலந்து கொண்டுள்ளனர்.
தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி தேர்வுகள் நடத்தப்படுவதோடு 32 தேர்வுகளுக்கான (நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 9 தேர்வுகள் உட்பட) தேர்வு முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, தோராயமாக 12,500 தேர்வர்கள் பல்வேறு அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பினை இந்த ஆண்டு பெற்றுள்ளனர்.
முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாட்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், மேலும்,ஒரேநேரத்தில் மதிப்பீடுசெய்யவேண்டிய தேர்வுகள் மற்றும் பிறதேர்வுகள் நடத்த வேண்டியிருந்ததாலும், தொகுதி-11 முதன்மை எழுத்துத்தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023 S வெளியிடப்படுவதாக ஏற்கனவே தற்காலிக தெரிவு முடிவு அட்டவனை (Tentative Result Declaration Schedule) குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.
தேர்வு முடிவுகளை விரைந்து வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன், தொகுதி- முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாட்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12- ஆம் தேதியில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தொகுதி |தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Regarding certain news articles about TNPSC especially on the delay in publishing the results of the Group-II Main Written Examination (Descriptive Type).
In this context, it is hereby informed that Annual Planner was already released on the Commission’s website on 15.12.2022 and updated on 15.03.2023. All the examinations (14 examinations) for which notifications were issued in the year 2023 have been conducted as per the Annual Planner. Nearly, 20 lakh candidates have appeared in the said examinations. TNPSC has not only conducted the examinations as per the Annual Planner but also released 32 results (including 9 results for the recruitments notified in the year 2023) as per the Annual Planner. Based on the results nearly 12,500 candidates have been selected and appointed to various posts in Government service this year.
Based on the high volume of work associated with the evaluation of answer booklets pertaining to Group-II Main Written Examination, other concurrent evaluations and conduct of other examinations by the Commission, it was informed in the Tentative Results Declaration Schedule section of the TNSPC website that the Group-II Main Written Examination result would be declared in December 2023.
The evaluation of the answer booklets are being expedited in order to declare the results of Group-II Main Written Examination. The evaluation process has been delayed due to concurrent examinations/results and cyclone & incessant rainfall. Despite the above said challenges, the results of Group-II Main Written Examination would be published on 12th January 2024. Therefore, the candidates are kindly advised not to believe the rumours that are being circulated in this regard.