ttf vasan சர்வதேச ஓட்டுநர் உரிமம் மூலம் தொடர்ந்து பைக் ஓட்டுவேன் ஜாமினில் வெளிவந்த டி டி எப் வாசன் பேட்டி
யூடியூபர் டி.டி.எஃப் வாசன் ஜாமினில் வெளிவந்தார்
புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் யூடியூபர் டி.டி.எஃப் வாசன் வெளியே வந்தார்.டி.டி.எஃப் வாசன் காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் கைதாகி புழல் சிறையில் இருந்த அவர் டி.டி.எஃப் வாசன் இதேபோல தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் ஓட்டுநர் ஒரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது
கடந்த செப்டம்பர் 18 ம் தேதி சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் பதிந்த வழக்கில், பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் என்கிற வைகுந்தவாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் மேலும் டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவு பிறப்பித்திருந்தார் அதன்படி 2033-ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டி.டி.எஃப் வாசன் தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதைத்தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து யூடியூபர் டி.டி.எஃப் வாசன் வெளியே வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய யூடியூபர் டி.டி.எஃப் வாசன், லைசென்ஸ் போனபோதுதான் மனம் வருந்தி, கண் கலங்கிவிட்டேன். ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்தது என்னை திருத்த வேண்டும் என்பதற்காக செய்யவில்லை, எனது வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்பதற்காக செய்ய மாதிரி உள்ளது என தெரிவித்தார்.
பைக் ஓட்டுவதை நிறுத்த மாட்டேன். 10 ஆண்டுகளுக்கு தன்னுடைய ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் சர்வதேச ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது மூலம் வாகனத்தை ஓட்டுவேன் என்று தெரிவித்தார். இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழக போக்குவரத்து துறை இந்தியாவில் அவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாத போது சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை மட்டும் வைத்து வாகனத்தை இயக்க அனுமதி இல்லை இந்தநிலையில், சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வைத்துக்கொண்டு இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் டிடிஎஃப் வாசன் வாகனத்தை ஓட்ட முடியாது அதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், சொந்த நாட்டில் வாகன ஓட்டுநர் உரிமம் ரத்தாகும், பொழுது சர்வதேச ஓட்டுநர் உரிமமும் ரத்தாகும், என தமிழக போக்குவரத்து ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.