TamilNadu News

ttf vasan டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் உயர்நீதிமன்றம் உத்தரவு.!

ttf vasan released on bail யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின் அளித்த சென்னை உயர்நீதிமன்றம்

டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடந்த செப்டம்பர் 18 ம் தேதி சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் பதிந்த வழக்கில், பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் என்கிற வைகுந்தவாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

ttf vasan
ttf vasan

மேலும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜாமீன் கேட்டு டிடிஎஃப் வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் .மனுவில் சாலையில் மிதமான வேகத்தில் வந்த நிலையில் கால்நடைகள் சாலையைக் கடந்ததால் திடீரென பிரேக் போட்டதில் வாகனத்தின் முன்சக்கரம் தூக்கியது ஒருவேளை நான் பிரேக் போடாமல் இருந்தால், கால்நடைகள் மற்றும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்.மேலும் நான் விபத்தில் காயம் அடைந்துள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி உள்ளது நான் ஒரு அப்பாவி. நான் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன் எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.என கூறி இருந்தார்

இந்த மனு மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணுக்கு வந்தது.அப்போது வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்தில் வலது கையில் காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனையடுத்து, காவல்துறை தரப்பில், வாசன் தன்னை சமூக வலைத்தளத்தில் பின்தொடரும் 40 லட்சம் ரசிகர்களுக்காக இது போன்று செய்துள்ளார்.இது போன்ற சாகசங்களை செய்ய வாசன் 2 முதல் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு கவச உடை மற்றும்20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கை வாங்கியுள்ளார்.இவரின் செயலால் கவரப்படும் இளைஞர்களிடையே அதிவேகமாக சென்று வழிப்பறியில் ஈடுபடும் எண்ணம் ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதற்காக ஜாமீன் வழங்கி விட முடியாது. ஜாமீன் வேண்டுமென்றால் முதலில் பைக்கை எரித்து விட்டு யூடியூப் பக்கத்தை நிரந்தரமாக முடக்கிவிட்டு நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.மேலும், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிஎஃப் வாசனின் வலது கையில் உள்ள காயத்தை சிறைத்துறை ஆய்வு செய்து தகுந்த முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்

அதன் பின்பு  டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவு பிறப்பித்தார்  2033-ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டி.டி.எஃப் வாசன் தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு அளித்து இருந்தார் டிடிஎப் வாசன். இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.மேலும், தான் 40 நாட்களாக சிறையில் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என டிடிஎப் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை அடுத்து டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் தினமும் டிடிஎப் வாசன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி 3 வாரம் கையெழுத்திட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Back to top button