ttf vasan bike accident video பயங்கர விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் வீடியோ
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் சாலை விபத்தில் படு காயம் வைரல் வீடியோ
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் சாலை விபத்தில் படு காயம் வைரல் வீடியோ
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் பிரபல யூ டிபர்களில் ஒருவர் டிடிஎப் வாசன். இவர் தனது இரு சக்கர வாகனம் மூலமாக சாலைகளில் வேகமாக செல்வதும், பல ஊர்களுக்கு செல்வதையும் வீடியோவாக எடுத்து யூ டியூபில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இன்று டிடிஎப் வாசன் அவருக்கு சொந்தமான சுஸுகி ஹயபுசா Suzuki Hayabusa என்ற தனது இரு சக்கர வாகனம் மூலமாக பைக்கில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டு இருந்தார்

அப்போது காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்ற அவர் பைக்கை வீலிங் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இதில்அவர் 3முறை தலைகீழாக சுத்தி கீழே விழுந்துள்ளார். பைக் ஒரு இடத்தில் விழுந்த நிலையில், டிடிஎஃப் வாசன் வேறு ஒரு இடத்தில் விழுந்தார். பைக் விழுந்த உடன் அதில் இருந்து புகை கிளம்ப தொடங்கியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவருக்கு கை எலும்பு உடைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த டிடிஎஃப் வாசனுக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கடந்த ஜூன் மாதம் அவரது பிறந்தநாள் அன்று அவர் நடிக்கும் ‘மஞ்சள் வீரன்’ படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிடிஎப் வாசன் விபத்து வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது
விபத்து வீடியோ பார்க்க:-
TTF வாசன் Accident??????pic.twitter.com/DOaImosWt2
— ஆந்தைகண்ணன் (@cinemascopetaml) September 17, 2023
மருத்துவமனையில் டிடி எப் வாசன் வீடியோ
#TTFVasan Hospital Video
👇👇👇👇pic.twitter.com/Lw8Ukmu9yg— ஆந்தைகண்ணன் (@cinemascopetaml) September 17, 2023