UAE Based Indian won 33 crore jackpot in raffle draw துபாயில் குழந்தைகளின் பிறந்தநாள் எண்ணில் வாங்கிய லாட்டரிக்கு ரூ.33 கோடி பரிசு பெற்ற இந்தியர்!
UAE Based Indian won 33 crore jackpot in raffle draw வளைகுடா நாடான துபாயில் 33 கோடி ரூபாய் இந்தியர் ஒருவருக்கு ஜாக்பாட் பரிசு விழுந்துள்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜீவ் அரிக்கட் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஐன் நகரத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருகின்றார்
இந்நிலையில் கடந்த வாரம் தனது 8 மற்றும் 5 வயதுடைய இரு குழந்தைகளின் பிறந்த நாட்களின் எண்களில் லாட்டரி ஒன்றை வாங்கி இருந்தார். அதன் குலுக்கல் இன்று நடைபெற்ற நிலையில், அவருக்கு முதல் பரிசாக 15 மில்லியன் திர்ராம்கள் பரிசுத்தொகை விழுந்துள்ளது.
இது இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய் ஆகும்.ஒரே நாளில் திடீரென கோடீஸ்வரன் ஆகியுள்ள ராஜீவ் தற்போது உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளார். ராஜீவ் வென்ற இந்த பரிசு தொகையை 19 பேருக்கு சமமாகப் பிரித்து தனது அதிர்ஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பியுள்ளார்
அவர் கடந்த 3 ஆண்டுகளாக டிக்கெட் வாங்குகிறேன். லாட்டரியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இந்த முறை நானும் என் மனைவியும் 7 மற்றும் 13 எண்கள் கொண்ட டிக்கெட்டுகளைத் தேர்ந்தெடுத்தோம். தனது குழந்தைகளின் பிறந்த நாட்கள் கொண்ட எண்ணில் ஜாக்பாட் கிடைத்திருப்பது தனக்கு மேலும் மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்