TamilNadu News

Udhayam Theatre மூடப்படும் சென்னை உதயம் தியேட்டர் முழு விவரம்

Udhayam Theatre மூடப்படும் சென்னை உதயம் தியேட்டர் முழு விவரம் மூடப்படும் சென்னை உதயம் தியேட்டர் முழு விவரம் சென்னையின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான உதயம் திரையரங்கும் மூடப்படுகிறது. இந்த வளாகத்தில் உதயம் மினி உதயம், சந்திரன், சூரியன் ஆகிய திரையரங்குகள் இயங்கி வந்தன.

1983-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கு 41 வருடங்களாக செயல்பட்டு வந்த நிலையில் இப்போது மூடப்படுகிறது. நீண்ட காலமாகியும் தியேட்டரின் உள்கட்டமைப்பு வசதிகளை அந்த நிர்வாகம் புதுப்பிக்காமல் இருந்ததால் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அங்கு குறைந்தே காணப்பட்டது.இந்த நிலையில், உதயம் திரையரங்கம் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Udhayam Theatre
Udhayam Theatre

இது திரையரங்க ரசிகர்கள் மத்தியில் சற்று வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் சமீபத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள சாந்தி திரையரங்கம் இடிக்கப்பட்டு அங்கு வணிக வளாகக் கட்டடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. அதைத் தொடர்ந்து தற்போது உதயம் திரையரங்க கட்டடமும் இடிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

Udhayam Theatre

More Details

Related Articles

Back to top button