Vanangaan review in tamil பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் பட திரை விமர்சனம்
Vanangaan review in tamil பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் பட திரை விமர்சனம்
நடிகர்கள்:-
அருண் விஜய் சமுத்திரக்கனி, மிஷ்கின், ரோஷினி பிரகாஷ் , ரிதா, சாயா தேவி, பாலசிவாஜி, சண்முகராஜன் ,ராதாரவி
இயக்கம்:- பாலா
இசை:- ஜி. வி. பிரகாஷ்
கதை:-
கன்னியாகுமரியில் சுனாமியால் பெற்றோர்களை இழந்த இரண்டு வெவ்வேறு குழந்தைகள் இணைந்து வளர்கின்றார்கள். அவர்களில் ஒருவர் அருண் விஜய் ஏற்று நடித்துள்ள கோட்டி கதாபாத்திரம், மற்றொருவர் அவரது தங்கை தேவி கதாபாத்திரம்.
இதில் கோட்டிக்கு பிறவியில் இருந்தே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. முறையான வேலை எல்லாம் எதுவும் இல்லாமல், கிடைக்கின்ற அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியவர். வேலைக்குச் சென்று தன் தங்கையின் நலனில் மிகுந்த கவனத்துடன் இருப்பவர், சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளைக் கண்டு ஆத்திரப்பட்டு அடிதடியில் இறங்குகிறார்.
கோட்டி, கோபத்தில் யாரையாவது அடித்து அது போலீஸ் பிரச்னையாகிவிட்டால், அவரை ஜாமீனில் எடுத்து அறிவுரை கூறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் சர்ச் ஃபாதர்,.
கோட்டி மீது சிறு வயதில் இருந்தே காதல் கொண்டவராக டீனா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார்.
ஊருக்குள் இப்படி தொடர்ந்து அருண் விஜய் செய்து வர, இவருக்கு நிலையான வேலை இருந்தால் மட்டுமே இப்படி எதுவும் செய்யமாட்டார் என முடிவு செய்து, அருண் விஜய்யின் நலன் விரும்பியான சர்ச் ஃபாதர், அவரை மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாவலராக வேலைக்குச் சேர்த்துவிடுகின்றனர்.
அங்கு, கண் தெரியாத, மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் சிறார்களிடம் மிக அன்புடன் கோட்டி நடந்துகொள்கிறார். அங்கு, வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே கண் தெரியாத பெண்களுக்கு ஒரு அவலம் நிகழ்கிறது.
கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண்கள் குளிப்பதை மூன்று பேர் பார்க்கின்றார்கள். இதனைக் கண்டுபிடித்த மாற்றுத் திறனாளி பெண்கள், தாங்கள் குளிப்பதை யாரோ பார்த்துவிட்டார்கள் என கோட்டியிடம் கூற, அதன் பின்னர் அவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களில் இருவரை கொடூரமாக கொன்றுவிடுகின்றார் பின்பு போலீஸ்சில் சரணடைகிறார்.
ஆனால் போலீஸ் எவ்வளவு கேட்டாலும் கொலைக்கான காரணத்தையும் சொல்லாமல் மூடி மறைக்கிறார் அருண் விஜய். இவர் எதற்காக இந்த கொலையை செய்தார்? இதன்பின் என்ன காரணம் உள்ளது? என்ன காரணத்திற்காக அந்த கொலையை செய்தான் என்று நீதிமன்றமும், காவல்துறையும் துருவி, துருவி கேட்கிறது. அதற்கு கோட்டி பதில் சொன்னானா இல்லையா என்பது தான் படத்தின் கதை!