village assistant recruitment 2024 எழுத படிக்க தெரிந்தா போதும் கிராம உதவியாளர் வேலை வாய்ப்பு
village assistant recruitment 2024 எழுத படிக்க தெரிந்தா போதும் கிராம உதவியாளர் வேலை வாய்ப்பு
காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை செயலாளர் உத்தரவு!
₹11,100 – ₹35,100 என்ற ஊதிய விகிதத்தில் பணியிடங்களை நிரப்பவும் அரசாணை வெளிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது 2022ம் ஆண்டு நிலவரப்படி மாநிலம் முழுவதும் 5,060 பணியிடங்கள் காலியாக உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
அரியலூர் மாவட்டத்தில் – 21 காலியிடங்கள்,
சென்னை மாவட்டத்தில் 20 காலியிடங்கள்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் -41 காலியிடங்கள்,
கோயம்புத்தூர் மாவட்டத்தில்-61 காலியிடங்கள்,
கடலூர் மாவட்டத்தில் – 66 காலியிடங்கள்,
திண்டுக்கல் மாவட்டத்தில் – 29 காலியிடங்கள்,
தருமபுரி மாவட்டத்தில் – 39 காலியிடங்கள்,
ஈரோடு மாவட்டத்தில் – 141 காலியிடங்கள்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் – 109 காலியிடங்கள்,
கரூர் மாவட்டத்தில் – 27 காலியிடங்கள்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் -33 காலியிடங்கள்,
மதுரை மாவட்டத்தில் – 155 காலியிடங்கள்,
மயிலாடுதுறை மாவட்டத்தில் – 13 காலியிடங்கள்,
நாகப்பட்டினம் மாவட்டத்தில் – 68 காலியிடங்கள்,
நாமக்கல் மாவட்டத்தில் – 68 காலியிடங்கள்,
பெரம்பலூர் மாவட்டத்தில் – 21 காலியிடங்கள்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் – 27 காலியிடங்கள் ,
ராமநாதபுரம் மாவட்டத்தில் – 29காலியிடங்கள் ,
ராணிபேட்டை மாவட்டத்தில் 43 காலியிடங்கள் ,
சேலம் மாவட்டத்தில் – 105 காலியிடங்கள் ,
சிவகங்கை மாவட்டத்தில் – 46 காலியிடங்கள் ,
தஞ்சாவூர் மாவட்டத்தில் – 305 காலியிடங்கள் ,
தேனி மாவட்டத்தில் -25 காலியிடங்கள் ,
திருவண்ணாமலை மாவட்டத்தில் – 103 காலியிடங்கள் ,
திருநெல்வேலி மாவட்டத்தில் – 45 காலியிடங்கள் ,
திருப்பூர் மாவட்டத்தில் – 102 காலியிடங்கள் ,
திருவாரூர் மாவட்டத்தில் – 139 காலியிடங்கள் ,
திருவள்ளூர் மாவட்டத்தில் – 151 காலியிடங்கள் ,
திருச்சி மாவட்டத்தில் – 104 காலியிடங்கள் ,
தூத்துக்குடி மாவட்டத்தில்- 77 காலியிடங்கள் ,
தென்காசிமாவட்டத்தில் – 18 காலியிடங்கள் ,
திருப்பத்தூர் மாவட்டத்தில் -32 காலியிடங்கள் ,
விருதுநகர் மாவட்டத்தில் – 38 காலியிடங்கள் ,
வேலூர் மாவட்டத்தில் – 30 காலியிடங்கள் ,
விழுப்புரம் மாவட்டத்தில் – 31 காலியிடங்கள் ,
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
இருப்பிடச் சான்று
சாதிச்சான்று
வேலைவாய்ப்பு பதிவு அட்டை
ஆதார் அடையாள அட்டை,
குடும்ப அட்டை பள்ளி மாற்றுச்சான்றிதழ்,
பிறப்பு சான்று,
ஆதரவற்ற விதவையாக இருப்பின் சான்று,
மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் அதற்குரிய அடையாள அட்டை
முன்னாள் ராணுவத்தினராக இருந்தால் அடையாள அட்டை
இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம்
விண்ணப்பதாரர் தகுதிகள்:-
1. ஒரு வருவய் கிராமத்திற்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே அளிக்க வேண்டும்.
2.சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.
3.சம்பந்தப்பட்ட வட்டத்தை தவிர இதர வட்டங்களை சேர்ந்தவர்கள், இதர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
4.குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32, இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 37. (மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு தொடர்புடைய அரசு ஆணைகளின்படி வயது தளர்வுகள் பின்பற்றப்படும்)
7. தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத / படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
8.சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
9.எந்தவித குற்ற வழக்கிலும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.
10. விண்ணப்பதாரரின் கணவரோ / மனைவியோ உயிருடன் இருக்கும்போது வேறு திருமணம் செய்தவராக இருக்கக்கூடாது.
11. விண்ணப்பத்துடன் அனைத்து சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
12. விண்ணப்பதாரர் தமது விண்ணப்பத்திற்காக எவ்வித சிபாரிசும் நடாக்கூடாது. எவ்வகையிலாவது சிபாரிசு செய்வது தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசின் இணையதளம் https://www.tn.gov.in-ல், வருவாய் நிர்வாக துறையின் இணையதளம் https://cra.tn.gov.in
village assistant recruitment 2024
More Details Click Here