will 10th pass என்னை பாஸ் பண்ணி விடுங்க, இல்லைன்னா கல்யாணம் பண்ணிடுவாங்க. வைரலாகும் 10ம் வகுப்பு மாணவியின் விடைத்தாள்
will 10th pass பீகார் மாநிலத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் தனது விடைத்தாளில் எழுதியிருக்கும் வாசகங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது
பீகாரில் கடந்த மாதம் 15-ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது விடைத்தாள் திருத்தும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் 10-ம் வகுப்பு மாணவியின் விடைத்தாள் வைரலாகி பரவி வருகிறது. அந்த விடைத்தாளில் மாணவி எனது அப்பா ஒரு விவசாயி. அவருக்கு குறைந்த அளவில் தான் வருமானம் கிடைக்கிறது. இதனால் எனது கல்வி செலவை அவரால் செய்ய முடியாத நிலை உள்ளது.
மேலும் அவர் என்னை படிக்க வைக்க விரும்பவில்லை. நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறி வருகிறார். அதையும் மீறி தான் நான் படித்து வருகிறேன்.மேலும் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள். எனக்கு நல்ல மதிப்பெண்கள் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவி” என தெரிவித்துள்ளார்.
