woman fell down from bus வளைவில் திரும்பிய பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ

வளைவில் திரும்பிய பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, பத்மனாபபுரம் அருகே வளைவில் பஸ் திரும்பிய போது தவறி கீழே விழுந்த பெண் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது கன்னியாகுமரி மாவட்டம் சரல்விளையை சேர்ந்தவர் செல்லத்தங்கம். இவர் தக்கலை பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல, திற்பரப்பு பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.

அவர் பஸ்சின் படிக்கட்டு அருகே நின்றுகொண்டு பயணம் செய்ததாக தெரிகிறது. அப்போது பேருந்து பத்பநாதபுரம் அருகே வளைவில் பஸ் திரும்பியபோது, திடீரென செல்லத்தங்கம் கீழே விழுந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் பின்பக்க சக்கரத்திற்குள் சிக்காமல் செல்லத்தங்கம் நூலிழையில் உயிர் தப்பினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தக்கலை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீடியோ பார்க்க :