TamilNadu Newsviral videos

women chased and caught thieves ரூ 55ஆயிரம் பணத்தை அபேஸ் செய்த 3 வடமாநில பெண்களை துரத்தி பிடித்து தர்மமடி கொடுத்த வீர மங்கை வைரல் வீடியோ 

ரூ 55ஆயிரம் பணத்தை அபேஸ் செய்த 3 வடமாநில பெண்களை துரத்தி பிடித்து தர்மமடி கொடுத்த வீர மங்கை வைரல் வீடியோ 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்  மஞ்சுளா (48), இவர் மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகில் கட்டண கழிப்பித்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

மஞ்சுளா தனது குடும்ப தேவைக்காக மாமல்லபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து   ரூ.55,000 பணம் எடுத்துள்ளார் . அந்த பணத்தை  ஒரு பிளாஸ்டிக் கவரில்  போட்டு கொண்டு வங்கி வாசல் படியை தாண்டி செல்லும் போது, அங்கு வாடிக்கையாளர் போல் அமர்ந்து இருந்த 3 வட மாநில பெண்கள், மஞ்சுளா அசரும்  நேரத்தில் பிளாஸ்டிக் கவரை பிளேடால்  அறுத்து, ரூ 55 ஆயிரத்துடன்  தப்ப முயன்றனர்.

women chased and caught thieves
women chased and caught thieves

உடனே சுதாரித்து கொண்ட மஞ்சுளா தன்னுடைய பணத்தை எடுத்து கொண்டு அந்த 3 பெண்கள் ஓட்டம் பிடிப்பதை கண்டார் அதில்  கையில் பணத்துடன் தப்பிக்க முயன்ற ஒரு பெண்ணை துரத்திபிடித்து நடுரோட்டிலேயே தலைமுடியை பிடித்து மஞ்சுளா அந்த பெண்ணுக்கு தர்மஅடி கொடுத்தார்.

அதற்குள் ஒரு ஆட்டோவில் தப்ப முயன்ற மற்ற 2 பெண்களையும் பொதுமக்கள் துரத்தி மடக்கி பிடித்தனர். பிறகு தகவல் அறிந்து  வந்த மாமல்லபுரம் போலீசார் 3 பெண்களையும் கைது செய்தனர் .

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 3 பேரும் மத்திய பிரதேசம் மாநிலம், ராஜ்புத் மாவட்டம், ஜான்டிகடை கிராமத்தை சேர்ந்த நிஷா(வயது35), பூஜா(வயது30), பிரவீனா(வயது40) என்பதும்  ஒரே ஊரை சேர்ந்த இந்த 3 பெண்களும், அரசு பேருந்தில்    பெண்களிடம நகை, பணம் ,பர்சு பறிப்பது போன்ற குற்ற செயல்களில் பல்வேறு இடங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

பட்டப்பகளில்  வங்கி வாசலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 வட மாநில பெண்களை  ஒரே ஆலாக பணத்தை திருடிய பெண்னை துரத்தி சென்று மடக்கி பிடித்து தர்மமடி கொடுத்த மஞ்சுளாவை அனைவரும் பாரட்டினர் 

CLICK HERE

women chased and caught thieves

 

Related Articles

Back to top button