youth dies by heart attack while batting கிரிக்கெடில் 6சர் அடித்தவருக்கு நேர்ந்த சோகம் வைரல் வீடியோ

இளம் வயது மாரடைப்பு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.குறிப்பாக கால்பந்து , கபடி ,கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஜிம்மில் உடற்பயிச்சி செய்யும் போது திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழக்கின்றனர் பொதுனாக தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பதால் வீரர்களுக்கு இதயத்தில் சிக்கல் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவதும் உண்டு. ஆனால் சமீப காலமாக இதுபோன்ற உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே போகிறது

அந்த வகையில் மும்பையில் தானே பகுதியில் மீரா சாலையில் உள்ள ஒரு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது, அங்கு இளைஞர் ஒருவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.அப்போது அவரை நோக்கி வந்த பந்தை சிக்ஸருக்கு அடித்து நின்ற அடுத்த நொடி திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.
இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் மயங்கி விழுந்த அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அந்த இளைஞர் மாரடைப்பு எற்ப்பட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்ததுள்ளது . இதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ பார்க்க
youth dies by heart attack while batting