technology news

How to Know If Your Phone Has a Virus ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி

How to Know If Your Phone Has a Virus ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதை கண்டுபிடிக்க ஸ்மார்ட்போன்கள் மூலம் பணப்பரிவர்த்தனை முதல் அனைத்து விஷயங்களையும் மேற்கொள்ள முடியும் என்பதால், இது ஹேக்கர்களின் குறியாக மாறியுள்ளது. அவர்கள் வைரஸ் மற்றும் ட்ரோஜன் ஆகியவற்றை பயன்படுத்த பணப்பரிவர்த்தனை மற்றும் தனிநபர் தகவல்களை திருடி மோசடி செய்கின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் சில செயலிகள் மற்றும் செல்போனுக்கு வரும் தேவையற்ற லிங்குகளை அசாதாரணமாக நாம் கிளிக் செய்து, அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடுகிறோம்.

How to Know If Your Phone Has a Virus
How to Know If Your Phone Has a Virus

உங்கள் ஸ்மார்ட்போனை எவ்வாறு பாதுகாப்பது?

பிரவுசர் உள்ளிட்ட பக்கங்களில் இருந்து தேவையற்ற ஆப்களை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவேடும் கூகுள் பிளே ஸ்டோர்ஸ் உறுதி செய்திருக்கும் செயலிகளை மட்டுமே, அந்த ஆப்பில் இருந்து பதிவிறக்கம் செய்யவேண்டும்

மேலும், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யும் செயலிகளாக இருந்தால் கூட, அந்த செயலிகளுக்கு அனைத்து அனுமதிகளையும் கொடுக்கக்கூடாது. அந்த செயலியின் தேவைக்கான அனுமதியை மட்டுமே இன்ஸ்டால் செய்யும்போது கொடுக்கவேண்டும்

ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதை கண்டுபிடிக்க சில டிரிக்ஸ்;-

1. உங்கள் அனுமதி இல்லாமல் செயலிகள் அல்லது வேறு ஏதேனும் ப்ரீமியம் பயன்பாடுக்காக உங்கள் அக்கவுண்டில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அல்லது, உங்களின் அனுமதி இல்லாமலேயே ப்ரீமியம் மெசேஜ் அல்லது அழைப்புகள் செல்லும்.

2. அதிகப்படியான விளம்பரங்கள் உங்கள் செல்போனில் தோன்றிக்கொண்டிருந்தால், விளம்பரம் தொடர்பான ட்ரோஜன் அல்லது வைரஸ் உங்கள் செல்போனுக்குள் நுழைந்திருக்கலாம்.

3. உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அப்போது, உங்களின் தொடர்பில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதை கண்டுபிடிக்க
ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதை கண்டுபிடிக்க

4. உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறன் முன்புபோல் இருக்காது. அடிக்கடி ஹேங்க் ஆகும் அல்லது மிகவும் ஸ்லோவான ஸ்பீடில் புரோகிராம்கள் இயங்கும்.

5. புதிய செயலிகள் உங்கள் அனுமதியில்லாமல் பதிவிறக்கமாகியிருக்கும். அப்படி இருந்தால் உடனடியாக உஷாராகிக்கொள்ளுங்கள்.

6. விரைவாக டேட்டா தீர்ந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கலாம். ஏனென்றால், அவையே டேட்டாக்களை அதிகம் பயன்படுத்தும்

7. பேட்டரி திடீரென குறையும், போன் சூடாகவும். இவையெல்லாம், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ்கள் இருப்பதற்கான அறிகுறி.

How to Know If Your Phone Has a Virus

Related Articles

Back to top button