flower expo in Semmozhi Poonga சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி முழு விவரம்

flower expo in Semmozhi Poonga சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி முழு விவரம் சென்னையின் பிரதானப் பகுதியில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவில் நாளை 10 ம் தேதி முதல் மலர் கண்காட்சி நடைப்பெற உள்ளது. செம்மொழி பூங்காவில் நாளை பிப்ரவரி 10ம் தேதி மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளதாக செம்மொழி பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மலர் கண்காட்சியை முன்னிட்டு பல வகையான மலர்கள் செம்மொழி பூங்காவில் பூத்துக் குலுங்கி, ஊட்டி, கொடைக்கானல் சென்று வந்த அனுபவத்தைத் தர காத்திருக்கின்றன. காதலர்கள் தின வாரத்தில் செம்மொழி பூங்கா விதவிதமான ரோஜாக்களுடன் பூத்துக் குலுங்கி காத்திருக்கின்றன.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கடந்த 2010ல் செம்மொழி பூங்காவை அப்போதைய முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்.இந்த பூங்காவில் ஏரளாமான மரங்கள், செடிகள், கொடிகள் என 500 க்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளது. ஏற்கனவே செம்மொழிப் பூங்காவில் அரிய வகை மலர்களான மல்லிகை, செண்பகம், பாரிஜாதம், பவளமல்லிகை என வாசனை மிக்க மலர்கள் அடங்கிய நறுமணத் தோட்டம் பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது. இதோடு மூலிகை செடிகளான துளசி, வசம்பு, குப்பைமேனி, இன்சுலின் செடி என உள்ளடக்கி, தனியே மூலிகைத் தோட்டமும் உண்டு. கூடவே போன்சாய் முறையில் வளர்க்கப்பட்ட ஆல், அரசு, மா, மாதுளை, கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, எலுமிச்சை மரங்கள் கொண்ட போன்சாய் தோட்டமும் பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்து படைக்கின்றது

இந்நிலையில், சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி வரும் 10ம் தேதி தொடங்க உள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களை வெருவாக கவரும் வகையில் கிருஷ்ணகிரி, கொடைக்கானல், குமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் எடுத்துவரப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது. சுமார் 10 லட்சம் மலர்கள் கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், மலர் கண்காட்சி சுமார் ஒருவாரம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது