6 year old boy attacked by street dog video அதிர்ச்சி வீடியோ நடந்து சென்ற 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்
6 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
6 year old boy attacked by street dog video ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று மதியம் 6 வயது சிறுவன் கார்த்திகேயா தனது வீட்டிற்க்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சிறுவனை துரத்தி துரத்தி வெறிகொண்டு கடித்தது .

சிறுவன் அலறிக்கொண்டு ஓடியும் விடாமல் துரத்திச்சென்று சிறுவனை கடித்து குதறியது. அப்போது தெருநாய்கள் சிறுவனைத் கடித்துக் குதறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டி வண்டியை நிறுத்தி நாய்களை விரட்டினார். நாய்கள் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த கார்த்திகேயாவை மீட்டு சிகிச்சைக்காக உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகின்றது
6 year old boy attacked by street dog video
வீடியோ பார்க்க:-