actor ajith travel video நடிகர் அஜித்தின் வைரல் பயண வீடியோ

actor ajith travel video நடிகர் அஜித்தின் வைரல் பயண வீடியோ
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்று இரண்டு திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டும் அல்லாமல் அவருக்கு கார் மற்றும் பைக் ரேசிங் மீது ஆர்வம் அதிகம் இருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு உயர்ரக ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார்.மேலும் ஐரோப்போவில் நடைபெறவுள்ள கார் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்துக்கொள்ளப் போவதாக வீடியோ வெளியானது.

நடிகர் அஜித் சில மாதங்களுக்கு முன் பைக்கில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டார் அதில் அவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பயணம் ஒரு சிறந்த விஷயம். பயணிக்கும் போது நாம் மேம்பட்ட மனிதராக மாறலாம். பயணமே ஒரு சிறந்த கல்வியாக அமைகிறது . மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காதவர்களை கூட வெறுக்க வைக்கிறது’ என்று ஒரு பழமொழி உண்டு. பயணம் மேற்கொள்ளும் போது தான் நமக்கு பலவித அனுபவங்கள் கிடைக்கும்.
நான் பயணித்தின்போது, பல நாடு மற்றும் பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களின் கலாச்சாரம் குறித்து அனுபவித்திருக்கிறேன். பயணத்தின் மூலம் தேசம், மதம், கலாச்சாரம் கடந்து பலதரப்பட்ட மனிதர்களை உணர முடியும் மேலும் அது நம்மை மேம்பட்ட மனிதராக்கும் என்று நடிகர் அஜித் குமார் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ பார்க்க: