actor anupaum kher image in fake 500 rupees note காந்திக்குப் பதிலாக நடிகர் அனுபம் கெரின் படத்துடன் போலி 500 ரூபாய் நோட்டுகள்

காந்திக்குப் பதிலாக நடிகர் அனுபம் கெரின் படத்துடன் போலி 500 ரூபாய் நோட்டுகள்
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்ததுள்ளது. , சூரத் நகரில் ஒரு ஆன்லைன் ஆடை விற்பனை நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. வெளி உலகத்திற்கு இந்த கடையில் ஆன்லைனி வரும் துணிகளின் ஆடர்களை விற்பனை செய்வதுபோல செயல் பட்டு வந்த நிலையில், கள்ள நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளனர்.

இதுதொடர்பான , சூரத் சிறப்புக் காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தள்ளது. உடனே , சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் ரூ. 1லட்சத்தி 20ஆயிம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளைப் கைபற்றினர் மேலும் அங்கிருந்த 3 பேரைக் கைது செய்தனர்.
இதில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் , அந்த 500 ரூபாய் பணக் கட்டுகளில் மகாத்மா காந்தியின் உருவத்திற்கு பதிலாக ஹிந்தி நடிகர் அனுபம் கேரின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது . அது மட்டும் அல்ல அந்த ரூபாய் நோட்டில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு பதிலாக ”இந்திய ரிசோல்” வங்கி என்று அச்சிடப்பட்டிருந்தது
அங்கு அச்சிடப்பட்டிருந்த மொத்த கள்ள நோட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்ததில். ”ஃபார்சி” என்ற ஹிந்தி வெப் சீரீஸை பார்த்து கள்ளநோட்டுகளை அச்சடித்ததாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்காவது நபரையும் போலீஸார் கைது செய்துனர்.
இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க: