baby shower dog viral video புடவைகட்டி, பாட்டு பாடி நாய்க்கு வளைகாப்பு செய்த நபர் வைரல் வீடியோ
baby shower dog viral video புடவைகட்டி, பாட்டு பாடி நாய்க்கு வளைகாப்பு செய்த நபர் வைரல் வீடியோ
கிருஷ்ணகிரி மாவட்டம் கூறாக்களப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாராயணன கூலித் தொழில் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் செல்லப் பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

அந்த நாய் கர்ப்பம் அடைந்தத்தை அடுத்து தன் நாயின் மீது உள்ள அதீத அன்பு கொண்டுள்ள நாராயணன், தனது நாய்க்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தார்.மேலும் வளைகாப்பு நடத்த பத்திரிக்கை அடித்து ,சொந்த பந்தம் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைத்துள்ளார். தொடர்ந்து தனது நாய்க்கு புடவை கட்டி மணப்பெண் போல அலங்கரித்து ஒன்பது தட்டில் சீர்வரிசையோடு, நலங்கு வைத்து வளைகாப்பு நிகழ்ச்சியை விமர்சையாக நடத்தியுள்ளார்.
ஒரு கூலித் தொழிலாளி, தான் வளர்க்கும் நாய்க்கு வளைகாப்பு நடத்திய நிகழ்வு சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ பார்க்க CLICK HERE