Bengaluru viral 3d billboard பெங்களூரில் சாலையில் மனதைக் கவரும் 3டி விளம்பர பலகை வைரல் வீடியோ

பெங்களூரில் சாலையில் மனதைக் கவரும் 3டி விளம்பர பலகை வைரல் வீடியோ
பெரிய நகரங்களில் மனதை கவரும் வகையிலான பல விளம்பரங்களைப் பார்த்திருப்போம் ஆனல் அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் பெங்களூரில் சாலையோரத்தில் நிறுவப்பட்ட 3D விளம்பர பலகை இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

பெங்களூரில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் “பெங்களூர் திண்டீஸ்” Bangalore Thindies என்ற விளம்பரப் பலகையில், ஒரு இளைஞர் கண்ணாடி கோப்பையில் காபியை ஊற்றி வாடிக்கையாளருக்கு தருவதைபோல் காட்டுகிறது. முதலில் சாதாரணமாக தெரியும் அந்த விளம்பர பலகை, அதில் உள்ள 3d அம்சங்கள் காரணமாக விளம்பர பலகையில் உள்ள இளைஞர் வெளியே வந்து சிரித்த முகத்துடன் கோப்பையை நீட்டி நமக்கு காபி கொடுப்பது போல் தோன்றுகின்றது. இதை பார்க்க டிவி யில் விளம்பரம் ஓடுவது போல் இருக்கும்.
இந்த விளம்பர பலகை தற்போதுஎணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க:
Bengaluru viral 3d billboard