bihar girl slept in railway track தற்கொலை செய்வதற்காக ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய பெண் வைரல் வீடியோ
தற்கொலை செய்வதற்காக ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய பெண் வைரல் வீடியோ
பீகார் மாநிலத்தில் மோதிஹரி மாவட்டத்தில் உள்ள சகியா ரயில் நிலையம் அருகில் ஒரு இளம் பெண் ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்யும் என்னத்தில் படுத்துள்ளார் .

அந்த பெண் படுத்து வெகு நேரமாகியும் ரயில் வரவில்லை என்பதால் அப்பெண் தண்டவாளத்திலேயே தூங்கிவிட்டார். அவர் தூங்கிய பிறகு அந்த வழியாக ரயில் ஒன்று வந்ததுள்ளது அருகில் ரயில் நிலையம் இருந்ததால் ரயில் சற்று மெதுவாக வந்தது.
தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்திருப்பதை பார்த்த ரயில்வே மோட்டார்மென் சுதாரித்துக்கொண்டு, ரயிலை பிரேக் போட்டு நிருத்தினார் அப்பெண் அருகில் ரயில் வந்து நின்றது.
பின் மோட்டார்மென் இறங்கி வந்து அப்பெண் அருகில் சென்று பார்த்த போது அவள் தூங்கிக்கொண்டிருந்தார். அவரை தூக்கத்திலிருந்து எழுப்பி தண்டவாளத்திலிருந்து வெளியேறும்படி கூறினார்.

ஆனால் தூக்கத்திலிருந்து எழுந்த அப்பெண் அங்கிருந்து போக மறுத்தார். அதற்குள் அங்குப் பொதுமக்கள் கூடினர். அதில் ஒரு பெண் வந்து தண்டவாளத்தில் அமர்ந்திருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினார். அனால் ரயில் தண்டவாளத்திலிருந்து வர முடியாது என்றும் தற்கொலை செய்யப்போகிறேன் என்றும் அப்பெண் கூறியிருக்கிறார். பின் வலுக்கட்டாயமாகத் தண்டவாளத்திலிருந்து வெளியில் இழுத்துச் சென்றார்.
தற்கொலைக்கான காரணம் என்ன என்று அந்த பெண் சொல்லவில்லை இந்த சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது
வைரல் வீடியோ பார்க்க:
https://x.com/i/status/1833400564413354488
bihar girl slept in railway track