British skydiver Nathy Odinson dies 29வது மாடியிலிருந்து குதித்த நபர் பாராசூட் திறக்காததால் பலி
சோகத்தில் முடிந்த ஸ்கை டைவரின் சாகசம் வைரல் வீடியோ

British skydiver Nathy Odinson dies 29 மாடி கட்டடத்தில் இருந்து SKYDIVE செய்யும்போது பாரஷூட் வேலை செய்யாததால் கீழே விழுந்து உயிரிழந்த ஸ்கைடைவர்! வைரல் வீடியோ
பிரிட்டனில் வசித்து வருபவர் பிரபல ‘ஸ்கை டைவர்’ நதி ஒடின்சன் இவருக்கு வயது 33.

இந்நிலையில் நதி ஒடின்சன், தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள 29 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பகுதியிலிருந்து பாராசூட்டுடன் கீழே டைவ் அடித்தார். அப்போது அவர் பாராசூட்டை விரிக்க முயன்றார்.ஆனால், எதிர்பாராதவிதமாக பாராசூட் விரியவில்லை. இதனால் மிக வேகமாக கீழே விழுந்த நதி ஒடின்சன் தரையில் மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பாதுகாவலர்கள் செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதில் “ஏதோ தரையில் விழுந்தது போன்றும் , பலத்த சப்தமும் கேட்டது. உடனடியாக அங்கு ஓடிச்சென்று பார்த்தபோது, ஒரு பெண் அழுது கொண்டிருந்தார். அப்போதுதான் நதி ஒடின்சன் கீழே விழுந்தது தெரிய வந்தது” எனத் தெரிவித்துள்ளனர்.
British skydiver Nathy Odinson dies
வைரல் வீடியோ பார்க்க:–