bus without front wheel ran with sparks அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று ஓடியதால் தரையில் உரசி தீப்பொறி பரந்த சிசிடிவி காட்சி
அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று ஓடியதால் தரையில் உரசி தீப்பொறி பரந்த சிசிடிவி காட்சி
சேலத்தில் இருந்து ஈரோடு செல்வதற் நேற்று மாலை புறப்பட்ட அரசு பேருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வரும் பொழுது பேருந்து பழுதானதால் அதில் இருந்த பயணிகளை இறக்கி மாற்று அரசு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின் பேருந்தின் ஓட்டுனர் ராஜாவும், நடத்துனர் மாயக்கண்ணனும் பழுதடைந்த பேருந்தை ஈரோடு பணிமனைக்கு கொண்டு செல்லும் பொழுது,
பேருந்து குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதி, சிவசக்தி நகர் அருகே சென்ற பொழுது, பேருந்தின் முன் சக்கரம் தனியாக கழன்று சாலையில் உருண்டு சென்றது. பேருந்தின் முன்சக்கரம் கழன்றதால், பேருந்து தார் சாலையில் உரசியதில் தீப்பொறி பறந்த படி சிறிது தூரம் வேகமாக வந்தது.
பேருந்தின் ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தியதில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பேருந்தில் பயணிகள் இல்லாததாள் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது, இந்த சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பரபரப்பான சிசிடிவி காட்சி பார்க்க: