car hits scooter and ran over on women ஸ்கூட்டர் மீது மோதிய கார் கீழே விழுந்த பெண் மீது மீண்டும் காரை செலுத்தியதில் ஒருவர் பலி வைரல் வீடியோ

ஸ்கூட்டர் மீது மோதிய கார் கீழே விழுந்த பெண் மீது மீண்டும் காரை செலுத்தியதில் ஒருவர் பலி வைரல் வீடியோ
கேரள மாநிலம் மைநாகப்பள்ளி என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.45 மணியளவில் அஜ்மல் என்ற நபர் ஓட்டிச் சென்ற கார் ஸ்கூட்டரில் சென்ற இரு பெண்கள் மீது மோதியது. இதில் இரண்டு பெண்களும் கீழே விழுந்தனர் அதில் குஞ்சுமோள் என்ற பெண் காரின் அடியில் சிக்கியுள்ளார்

இந்த விபத்தை பார்த்த மக்கள் விரைந்து வருவதை பார்த்த அஜ்மல், பீதியில் காரை மீண்டும் குஞ்சுமோள் மீது செலுத்தி அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் காரின் பின் சக்கரம் குஞ்சுமோளின் கழுத்தில் ஏறியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குஞ்சுமோள் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
மேலும் இந்த விபத்தின் போது அஜ்மலுடன் ஒரு தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தப்பியோடிய அஜ்மல் மற்றும் அந்த பெண் மருத்துவரையும் போலீஸார் கைது செய்தனர்
வைரல் வீடியோ: