viral videosTamilNadu News

crackers accident cctv திருவிழாவில் பட்டாசு வெடித்து சிறுவன் உள்பட 2 பேர் படுகாயம்! அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

திருவிழாவில் பட்டாசு வெடித்து சிறுவன் காயம்

crackers accident cctv சேலம் மாவட்டத்தில், கோயில் திருவிழாவின் போது, பட்டாசு வெடித்ததில் விபத்து ஏற்பட்டு, 9 வயது சிறுவன் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டத்தில் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் குழி இருசாயி அம்மன் கோவில் திருவிழாவின் ஒருபகுதியாக வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது இடைப்பாடி இளவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (26) என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பட்டாசு வைத்திருந்தார்.

crackers accident cctv
crackers accident cctv

அப்போது வெடித்து சிதறிய தீப்பொறி ஒன்று இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாசு மீது பட்டு வெடித்து சிறியது. இதில் இருசக்கர வாகனத்தின் மீது உட்கார்ந்து இருந்த சக்திவேலுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அதே போல் திருவிழாவை பார்க்க வந்திருந்த ஓமலூர் கமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் கவின் (9) என்பவரும் பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்தார். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பட்டாசு வெடி விபத்தின் போது திருவிழா பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை ரோந்து வாகனம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

வீடியோ பார்க்க CLICK HERE

crackers accident cctv

Related Articles

Back to top button