viral videos
crocodile travels in scooter ஸ்கூட்டரில் சவாரி செய்த முதலை வைரல் வீடியோ

ஸ்கூட்டரில் சவாரி செய்த முதலை வைரல் வீடியோ
குஜராத்தில் தொடர் கன மழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் விஸ்வாமித்ரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரை உடைந்தது வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது, இதன் காரணமாக முதலைகளின் உறைவிடமாக இருக்கும் இந்த நதியில் இருந்து முதலைகளும் ஊருக்குள் புகுந்ததால், வதோதராவில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது .

கடந்த நான்கு நாட்களில் , வதோதரா நகரின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 25 முதலைகள் மீட்கப்பட்டுள்ளன.
குஜராத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வதோதராவில் சிக்கிய முதலையை IMA என்ற தன்னார்வலர்கள் மீட்டு ஸ்கூட்டரில் தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ பார்க்க:
crocodile travels in scooter