dog sets house on fire by chewing power bank செல்ல பிராணியால் ஏற்பட்ட தீ விபத்தில் பற்றி எரிந்த வீடு
செல்ல பிராணியால் ஏற்பட்ட தீ விபத்தில் பற்றி எரிந்த வீடு
அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் உள்ள ஒரு வீட்டின் ஹாலில் செல்லப் பிராணிகளான இரண்டு நாய்களும் ஒரு பூனையும் ஓய்வு எடுத்து கொண்டிருந்தன. அதில் ஒரு நாய் மெத்தையில் அமர்ந்து பவர் பேங்கை கடித்து விளையாடி கொண்டிருந்தது. திடீரென அதில் தீப்பொறி கிளம்பியதை பார்த்த அந்த நாய் பவர் பேங்கை அது படுத்திருந்த மெத்தை மீது போட்டு விட்டு ஓடியது . சிறிது நேரத்தில் மெத்தை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. உடனே செல்லப்பிராணிகள் வெளியேற அமைக்கபட்டுருந்த கதவு வழியாக செல்லப்பிராணிகள் வீட்டை விட்டு வெளியேறின.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, லித்தியம் அயன் பேட்டரிகளிள் உள்ள ஆபத்துகள் குறித்து செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகள் வைத்துள்ளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையை வழங்கியுள்ளதோடு குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு எட்டாத வகையில் இந்த பேட்டரிகளை வைக்க வேண்டியதன் அவசியத்தை குறித்தும் துல்சா தீயணைப்புத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.மேலும் லித்தியம் அயன் பேட்டரிகளிள் வெப்பத்தை உருவாக்கலாம், எரியக்கூடிய மற்றும் நச்சு வாயுக்களை உருவாக்கலாம், மேலும் வெடிப்புகளுக்கு கூட வழிவகுக்கும் என்று தீயணைப்புத் துறை எச்சரித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக துல்சா தீயணைப்புத் துறை வீடியோவை வெளியிட்டு விழிப்புனர்வை எற்படுத்தியதை தொடர்ந்து .இந்த வீடியோ இணயத்தில் வைரலாகியுள்ளது
வைரல் வீடியோ:
dog sets house on fire by chewing power bank