dubai man gifted a Island worth Rs 418 crore for his wife துபாயில் தன் மனைவிக்கு ரூ 418 கோடியில் தனி தீவை வாங்கி கணவர்

துபாயில் தன் மனைவிக்கு ரூ 418 கோடியில் தனி தீவை வாங்கி கணவர்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் அல் நடாக் (26). துபாய்க்கு படிக்க சென்ற இடத்தில் தொழிலதிபரான ஜமால் என்பவரை சந்தித்திருக்கிறார். இவர்களுக்குள் காதல் மலர்ந்து 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமும் செய்து கொண்டனர்.

மனைவி மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்ட ஜமால், அவருக்காக ஏராளமான மதிப்பு மிகுந்த பரிசுப் பொருட்களை வாங்கித் தந்துள்ளார். இந்த நிலையில், தனது மனைவி பிகினி உடையில் நீச்சல் குளிக்க ஆசைப்பட்டதால், ஜமால் அவருக்காக ஒரு தனித்தீவை வாங்கியுள்ளார்.அந்த தீவின் மதிப்பு 418 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அவரது மனைவி தனது இன்ஸ்டாவில் பீச்சில் தளர்வான ஆடை அணிந்தபடி இருக்க விரும்பினேன். ஆனால், அந்த ஆடையில் இருக்கும்போது, பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். அதனால், என்னுடைய கணவர் பீச் ஒன்றை விலைக்கு வாங்கி விட்டார் என கூறியுள்ளார். எனினும், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, அந்த தீவு பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. அந்த தீவு ஆசியாவில் உள்ளது என கூறியுள்ளார். அதன் விலை இந்திய மதிப்பில் ரூ.418 கோடி (50 லட்சம் டாலர்) ஆகும்.
வீடியோ பார்க்க: