electric shock hit 2kids on bicycle 1dead சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் பலி அதிர்ச்சி சிசிடிவி வீடியோ

சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் பலி அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
ஆந்திர மாநிலம் கடப்பாவில் புதன்கிழமை காலை, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த இரு மாணவர்கள், சர்வதேச நல மண்டபம் அருகே உள்ள அங்காடி தெருவில், தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பியில் சிக்கி தீப்பிடித்த சோக சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம் கடப்பா பெல்லமண்டியில் உள்ள அனைத்துலக நல மண்டபம் அருகே தெருக்களில் தொங்கும் மின் கம்பிகளுக்கு இடையே மாணவர்கள் மதிய உணவிற்காக வீட்டிற்குச் சென்றுவிட்டு பள்ளிகூடத்திற்க்கு திரும்பி செல்லும் போது இரண்டு மாணவர்களும் சிக்கியுள்ளனர்.
இரண்டு சிறுவர்கள் மீதும் மின்சார கம்பியில் சிக்கியுடன் சைக்கிளில் இருந்து கீழே விழுகின்றார்கள் உடனே சில நிமிடங்கள் மாணவர்களில் ஒருவரின் உடலில் தீப்பிடித்தது, மற்ற சிறுவன் அவன் பக்கத்தில் அசையாமல் கிடந்தான்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுவர்களை காப்பாற்றி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அதில் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக இறந்தார், மற்றொன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பலத்த தீக்காயங்களுடன் இறந்த நபர் தன்வீர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதிர்ச்சி வீடியோ பார்க்க: