girl fall from 6th floor while shooting reels 6வது மாடியில் பால்கனியில் நின்று ரீல்ஸ் எடுக்கும் போது தவரி விழுந்த பெண் வைரல் வீடியோ

6வது மாடியில் பால்கனியில் நின்று ரீல்ஸ் எடுக்கும் போது தவரி விழுந்த பெண் வைரல் வீடியோ
உத்திரபிரதேசம் காஜியாபாத்தில் தனது வீட்டின் பால்கனியில் இருந்து ரீல்ஸ் எடுத்த சிறுமி தவறி விழுந்தார்.சிறுமி வீட்டு பால்கனியில் நின்று கொண்டிருந்த போது அவள் கையிலிருந்து மொபைல் நழுவியது. போனை பிடிக்க முயன்ற போது பால்கனியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். சிறுமி வலியால் கதறி அழுவதும், அவரது தாய் திட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது

காசியாபாத் இந்திரபுரம் பகுதியில் உள்ள கிளவுட்-9 சொசைட்டியில் வசித்து வந்த சிறுமி மோனிஷா (16). ஆறாவது மாடியில் இருந்து விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோ, சிறுமி தரையில் கிடப்பதைக் காட்டுகிறது, மக்கள் விரைந்து வந்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் தூக்கியபோது, சிறுமி வலியால் கதறி அழுதாள்.
வீடியோ பார்க்க: