girls drinks beer in class room சீர் கெட்டு அழியும் பள்ளி மாணவிகள் வகுப்பறையில் பீர் குடிக்கும் வைரல் வீடியோ

சீர் கெட்டு அழியும் பள்ளி மாணவிகள் வகுப்பறையில் பீர் குடிக்கும் வைரல் வீடியோ
சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பட்சவுரா கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்றில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்ததுள்ளது . இதில், கலந்து கொண்ட மாணவிகள் பீர் மற்றும் குளிர்பானங்களை குடிப்பது போன்ற காட்சிகளை வீடியோ எடுத்துள்ளனர் .
அந்த வீடியோவில் ஒரு டேபிள் மீது பீர் பாட்டில்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் வைக்கப்பட்டு, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இவற்றை புகைப்படங்கள் மற்றும், ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவும் செய்துனர்.

இச்சம்பவத்தின் போது ஆசிரியர்களும் உடனிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இது தவரான செயல் என்று யாரும் மாணவிகளை தடுக்கவில்லை என்று கூறப்படுகிறது
பிலாஸ்பூர் மாவட்ட கல்வி அதிகாரி சாகு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். அதில் சம்பவம் நடந்தது உண்மை என உறுதி செய்யப்படுள்ளது.,
மேலும் மாணவிகள் தரப்பில் பீர் பாட்டில்களை கைகளில் வைத்தபடி வீடியோ எடுத்ததாகவும் மற்றபடி உண்மையில் பீர் குடிக்கவில்லை என கூறியுள்ளனர்.
மேலும் அந்த மாணவிகளின் பெற்றோருகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என கல்வி அதிகாரி கூறியுள்ளார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.