Goods train running without pilot ஓட்டுநர் இல்லாமல் 78 கி.மீ வரை ஓடிய சரக்கு ரயில்.. வைரல் வீடியோ
Goods train running without pilot ஓட்டுநர் இல்லாமல் 78 கி.மீ வரை ஓடிய சரக்கு ரயில்.. வைரல் வீடியோ ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் இருந்து ஓட்டுநர் இல்லாமல் சுமார் 78 கி.மீ தூரம் வரை பயணித்த சரக்கு ரயிலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் இருந்து, இன்று (பிப்.25) காலை இன்ஜின் டிரைவர் இல்லாமல் சரக்கு ரயில் (14806R) புறப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில் இயங்கியதற்கு, ரயிலை ஓட்டி வந்த டிரைவர் இன்ஜினை ஆஃப் செய்யாமலும், ஹேண்ட் பிரேக் போடாமலும் ரயிலில் இருந்து இறங்கியதே காரணம் எனக் கூறப்படுகிறது.
உடனடியாக கதுவா ரயில் நிலைய அதிகாரிகள், பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள சுஜன்பூர் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த, அங்குள்ள அதிகாரிகள் பதான்கோட் கான்ட், கன்ட்ரோடி, பங்களா, மிர்தல், முகேரியன் ஆகிய இடங்களில் சரக்கு ரயிலை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, சரக்கு ரயிலின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியதை அடுத்து, கதுவாவில் இருந்து சுமார் 78 கி.மீ தூரம் வரை பயணித்த சரக்கு ரயில், பஞ்சாப்பின் கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
கதுவாவிலிருந்து சுமார் 78 கிலோமீட்டர் தூரம் பயணித்த பிறகு, சரக்கு ரெயில் பஞ்சாபின் கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸ்சியை அடைந்ததாக கூறப்படுகிறது. அங்கு சரக்கு ரெயில் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் இருந்து இன்ஜின் டிரைவர் இல்லாமல் சுமார் 78 கி.மீ தூரம் வரை பயணித்த சரக்கு ரயிலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Goods train running without pilot
इस वीडियो में बताया जा रहा है जो मालगाड़ी चल रही है
इसमें ड्राइवर नहीं है.ये ट्रेन जम्मू से पंजाब की ओर बढ़ रही है#Punjab #JammuKashmir #trains #train pic.twitter.com/JwK48l9tKG
— 💕Jitender singh💕 (@jitenderdbd) February 25, 2024