husban shows 30 lakhs bribe money of wife லஞ்சம் வாங்கிய மனைவியை காட்டிக்கொடுத்து வீடியோ வெளியிட்ட கணவர்

லஞ்சம் வாங்கிய மனைவியை காட்டிக்கொடுத்து வீடியோ வெளியிட்ட கணவர்
லஞ்சம் வாங்கிய மனைவியை காட்டிக்கொடுத்து வீடியோ வெளியிட்ட கணவர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மணிகொண்டா நகராட்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றுபவர் திவ்யா ஜோதி. இவரது கணவர் ஸ்ரீபாத். திவ்ய ஜோதி பணியாற்றும் இடத்தில் லஞ்சம் வாங்கியுள்ளார் . மேலும் அந்த லஞ்ச பணத்தை வீட்டில் பல அறையில் பதுக்கி வைத்துள்ளார். மனைவி லஞ்சம் வாங்குவதை பல முறை கண்டித்துள்ளார் கணவர் ஸ்ரீபாத். ஆனால் அதை கண்டுகொள்ளாத திவ்யா ஜோதி லஞ்சம் வாங்குவதை தொடர்ந்துள்ளார்,மேலும் லஞ்ச பணத்தில் பல சொத்துக்களை வாங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவன் , தன் மனைவி லஞ்சம் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்துள்ள பணத்தை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார். லட்சம் வாங்கி சுமார் 30 லட்சம் ரூபாய் ஸ்ரீபாத் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது மனைவி திவ்ய ஜோதியின் இந்த நடவடிக்கைகளுக்கு தனது மனைவியின் அண்ணன் சரத் குமார் தான் காரணம் என்றும் லஞ்சம் வாங்குமாறு திவ்ய ஜோதிக்கு அவர்தான் அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, திவ்ய ஜோதி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் மேலும் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலர் பாராட்டுக்களை குவிந்து வருகின்றன. இந்தியன் பட காட்சிகள் போல் இந்த சம்பவம் அமைந்துள்ளதாக இணைத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ பார்க்க: