karachi dream bazar mall looted மால் திரப்பு விழாவில் 30 நிமிடத்தில் அனைத்து பொருட்களயும் கொள்ளையடித்துச் சென்றனர் மக்கள் வைரல் வீடியோ
கராச்சியில் புதிய ட்ரீம் பஜார் மால் திறப்பு விழா

மால் திரப்பு விழாவில் 30 நிமிடத்தில் அனைத்து பொருட்களயும் கொள்ளையடித்துச் சென்றனர் மக்கள் வைரல் வீடியோ
பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் புதிய dream bazar ‘ட்ரீம் பஜார்’ மால் திறப்பு விழா என்று கடந்த வெள்ளிக்கிழமை விளம்பரப்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து இந்திய மதிப்பில், ரூ.15 இருந்து பொருட்களின் ஆரம்ப விலை என விளம்பரப்படுத்தப்பட்ட இந்நிலையில், தொடக்க நாளான செப் 1 ஆம் தேதி மாலை 3 மணிக்கு வணிக வளாகம் திறக்கப்பட்டவுடன் லட்சகணக்கானோர் கடைக்குள் குவிந்தனர்.

இதனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தினரிய ஊழியர்கள் பாதுகாப்புப் படைக்கு தகவல் கொடுத்தனர் . அங்கு வந்த பாதுகாப்புப்யினர் கதவுகளை அடைத்தனர். எனினும், மக்கள் வளாகத்தின் கண்ணாடிகளை உடைத்து அங்கிருந்த அனைத்து பொருட்களயும் கொள்ளையடித்துச் சென்றனர். அரை மணி நேரத்தில், கடை முழுவதையும் மக்கள் சூறையாடினர் மேலும் கடையின் மற்ற பொருட்களையும் சேதப்படுத்தினர்.
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், மால் உரிமையாளர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை உதவிக்கு அழைத்தனர், ஆனால் ராணுவத்தினர் வருவதற்குள், மக்கள் கடையை கொள்ளையடித்துவிட்டனர்.
பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டு, வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலதிபர் ஒருவர் குறைந்த விலையில் தனது மக்களுக்கு பொருட்களை வழங்குவதற்காக இந்த dream bazar ‘ட்ரீம் பஜார்’ எனும் வணிக வளாகத்தை தொடங்கினார். ஆனால் அங்கு நடந்த சம்பவம் தொழிலதிபருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.