kids injured while trying to make bomb யூடியூப் வீடியோ பார்த்து வெடிகுண்டு தயாரித்த 5 குழந்தைகள் வெடிவிபத்தில் காயம்

யூடியூப் வீடியோ பார்த்து வெடிகுண்டு தயாரித்த 5 குழந்தைகள் வெடிவிபத்தில் காயம்
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து வெடிகுண்டு தயாரிக்க முயன்ற 5 குழந்தைகள் வெடிவிபத்தில் காயமடைந்தனர்.
குழந்தைகள் தீகுச்சியில் இருந்து மருந்தை பிரித்தெடுத்து பேட்டரியில் அடைத்து தீ பற்ற வைத்தபோது பெரும் வெடிப்பு ஏற்பட்டது. இதில் 5 குழந்தைகள் , லவ் குமார் ( 8), குஷ் குமார் ( 5), ஜெய்தீப் குமார், அபியன்சு குமார் ( 6) மற்றும் குட்டு குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

வெடி சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் குழந்தைகளை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக கயாகாட் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்
வெடி விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மூத்த காவல் கண்காணிப்பாளர் SSP ராகேஷ் குமார், குழந்தைகள் யூடியூப் வீடியோக்களில் இருந்து கற்றுக்கொண்ட பொருட்களைப் பரிசோதித்ததாகக் கூறி விவரங்களை உறுதிப்படுத்தினார்.
ISSP குமார் கூறுகையில்,ஆபத்தான செயலில் ஈடுபடுவதற்கு குழுவில் உள்ள ஒரு முத்த வயதான குழந்தையால் மற்ற குழந்தைகள் ஊக்குவிக்கப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளதாக தெறிவித்தார் மேலும் அவர்கள் அவரது அறிவுறுத்தலைப் பின்பற்றியபோது, வெடிப்பு ஏற்பட்டது என்றும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.