lady catch hiding snake in office அலுவலகத்தில் புகுந்த பாம்பை இளம் பெண் ஒருவர் அசால்டாக பிடித்த வைரல் வீடியோ

அலுவலகத்தில் புகுந்த பாம்பை இளம் பெண் ஒருவர் அசால்டாக பிடித்த வைரல் வீடியோ
சத்தீஸ்கர் மாநிலம், பில்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் பாம்பு பதுங்கி உள்ளதாக பாம்பு மீட்கும் குழுவுக்கு தகவல் தெரிவித்த அலுவலக ஊழியர்கள் ஆச்சரியப்படும் வகையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தது, பயிற்சி பெற்ற பாம்பு பிடிக்கும் இளம் பெண் அஜிதா பாண்டே!
அலுவலகத்திற்குள் வந்த அஜிதாவிடம் ஊழியர்கள் பாம்பு புத்தகங்களுக்கு பின் மறைந்திருப்பதாக கூறுனாரகள் . பாம்பு இருக்கும் இடத்திற்கு சென்ற அஜிதா, பாம்பு பிடிக்க பார்த்தப்போது ஒருவர், “பாம்பு தாவி தாக்க வாய்ப்புள்ளது, பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறுகிறார்

ஆனால் எதயிம் பொருட்படுத்தாத அஜிதா, பாம்பை வெறும் கைகளால் அசால்டாக பிடித்து அங்கிருந்த ஒரு பையில் பாம்பை போட்டுக்கொண்டு நடந்து சென்ரார் .
“இந்த பாம்பு விஷமற்றது. இது எலி போன்ற உண்வை பிடிக்க இந்த இடத்திற்கு வந்திருக்க கூடும். யாரும் பயப்பட வேண்டாம்” என்று அஜிதா தெரிவித்துள்ளார்.
அந்த அலுவலக ஊழியர் ஒருவர் பாம்பு உங்களை கடிக்க முயற்சிக்கவில்லையா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அஜிதா , “இல்லை, அதை நீங்கள் எந்த வித தொந்தரவு செய்யாததால் அது மிகவும் அமைதியாக உள்ளது” என சிரித்த முகத்துடன் தெரிவித்துள்ளார்.
அஜிதா பாண்டேவின் இந்த துணிச்சலான செயல் , தெளிவான பேச்சை கண்டு அங்கிருந்தவர்கள் அவருக்கு கை தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இளம் பெண், அசால்டாக பாம்பு பிடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
வைரல் வீடியோ பார்க்கஇங்கு கிளிக் செய்யவும்
lady catch hiding snake in office