man come to hospital with alive snake பாம்பை உயிருடன் பிடித்து டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நபர் வைரல் வீடியோ

பாம்பை உயிருடன் பிடித்து டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நபர் வைரல் வீடியோ
உத்திரபிரதேச மாநிலம், சம்பூர்ணா நகரை சேர்ந்த ஹரிஷ்வரூப் மிஸ்ரா(40) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை தோட்டத்தில் வேலை செய்து செய்து கொண்டு இருந்தபோது ஒரு நாகப்பாம்பு இவரை கடித்துள்ளது. உடனே சற்றும் அவரை கடித்த பாம்பை பிடித்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு அதை எடுத்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்று தன்னை இந்த பாம்பு தான் கடித்து விட்டதாகவும், தனக்கு சிகிச்சை கொடுக்குமாறும் கூறியுள்ளார்.

பிளாஸ்டிக் டப்பாவில் உயிருடன் இருந்த பாம்பை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் பின் ஹரிஷ்வரூப் மிஸ்ராவைன் தைரியத்தை பாராட்டி அவருக்கு சிகிச்சை அளித்தார்கள்.
அப்போது ஹரிஷ் பாம்பு கடித்த இடத்தைகாட்டினார் , கடித்த உடனேயே நான் பாம்பை பிடித்து விட்டேன் என்று மருத்துவர்களிடம் கூறினார். இதனை மருத்துவ நிர்வாகம் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளது . இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிரது மேலும் இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வைரல் வீடியோ பார்க்க: