man dragged in car in Wayanad பிரச்சனைக்கு சமாதானம் செய்த நபரின் கைகளை காரின் சிக்க வைத்து 1/2 கிமீ இழுத்துச் செல்லப்பட்ட பகீர் வீடியோ
பிரச்சனைக்கு சமாதானம் செய்த நபரின் கைகளை காரின் சிக்க வைத்து 1/2 கிமீ இழுத்துச் செல்லப்பட்ட பகீர் வீடியோ
கேரள மாநிலம், வயநாடு மானந்தவாடி பகுதியில் கபினி நதியின் இரண்டு கிளைகள் சேரும் இடம் கூடல்கடவு பகுதியில் செக் டேமுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில்,
அங்கு சுற்றுலாவிற்கு இரண்டு கார்களில் வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்க முயன்று உள்ளனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மாதன் என்ற பழங்குடியின நபர், அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.அப்போது அதில் ஒரு தரப்பினர் மாதனை தாக்கி அவரது கைகளை காரின் கதவில் சிக்க வைத்து காரை இயக்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளார்.
இதை தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மாதனை மீட்டுள்ளனர். மேலும், மாதனை விட்டுவிட்டு காரில் இருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனை பின்னால் வந்த வாகனத்தில் வந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
பலத்த காயம் அடைந்த மாதனை மீட்டு மானந்தவாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காரின் பதிவு எண்ணைக் வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். மாதன் மீது கொலை முயற்சி செய்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைவில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வோம் என போலீசார் தெரிவித்துள்ளனர் .
man dragged in car in Wayanad