man drove car on civilians and killed 35 people சீனாவில் பொதுமக்கள் மீது கார் ஏற்றி 35 பேரை கொன்ற முதியவர் அதிர்ச்சி வீடியோ
man drove car on civilians and killed 35 people சீனாவில் பொதுமக்கள் மீது கார் ஏற்றி 35 பேரை கொன்ற முதியவர் அதிர்ச்சி வீடியோ
சீனாவின் ஜுஹாய் நகரில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக கார் மோதியதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு
சீனாவின் Zhuhai நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மக்கள் மீது ஃபேன் என்ற குடும்பப்பெயர் கொண்ட 62 வயது ஆண் ஓட்டுநர் விளையாட்டு மைதானத்தின் கேட் வழியாக காரை ஓட்டி வந்து விளையாட்டு மையத்தின் உள் சாலைகளில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடி தனமாக காரை ஏற்றியுள்ளார்
இந்த கொடூர சம்பவத்தில் 35 பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார்கள், மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
மேலும் காருக்குள்ளேயே அந்த முதியவர் தனது கையையும் கழுத்தையும், கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்தி சுயநினைவின்றி கோமாவில் இருக்கின்றார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்த உடன் அதிகாரிகள் அந்த விளையாட்டு மையத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்
மனைவி உடனான விவாகரத்தின் போது சொத்துக்களை எவ்வாறு பிரிப்பது என்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன உளைச்சளில் இருந்த அவர் இது போல் காரை ஓட்டியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது
கார் மோதிய சம்பவத்திற்குப் பிறகு பாதுகாப்பு மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உறுதி செய்யுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து முயற்சிகளையும் Xi வலியுறுத்தியதோடு, சட்டத்தின்படி குற்றவாளிக்கு தண்டனை வழங்கவும் கோரினார் என்று அதிகாரப்பூர்வ Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வைரல் வீடியோ பார்க்க: