man sitting on sewage canal wall fell and died கால்வாயின் சுவற்றின் மீது உட்கார்ந்த நபர் தடுமாறி சாக்கடையில் விழுந்து பறிபோன உயிர் வைரல் வீடியோ

கால்வாயின் சுவற்றின் மீது உட்கார்ந்த நபர் தடுமாறி சாக்கடையில் விழுந்து பறிபோன உயிர் வைரல் வீடியோ
டெல்லி பஜன் புரா மாவட்டத்தில் வசிக்கும் ஹரிஷ் பைச்லா(32) என்பவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது வீட்டுக்கு வெளியில் உள்ள , சாக்கடை கால்வாயின் சுவற்றின் மீது உட்கார்ந்துள்ளார். அப்போது அந்த கால்வாயின் விளிம்பில் உட்கார்ந்ததை மறந்துபோன அவர், சற்று பின்னால் சாய்ந்து அமர முயற்சித்தார். அப்போது நிலை தடுமாறி சாக்கடை கால்வாயில் விழுந்தார்.

இதனைப் பார்த்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் கால்வாயின் ஆழம் அதிகமாக இருந்ததாலும் , அதில் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே, காவல்துறையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஹரிஷ் பைச்லாவின் உடலை மீட்க நீர்மூழ்கி வீரர்களை வரவழைத்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க: