man throughs stones on train passengers ஓடும் ரயிலில் பயணிகள் மீது கற்களை வீசிய நபர் அதிர்ச்சி வீடியோ

ஓடும் ரயிலில் பயணிகள் மீது கற்களை வீசிய நபர் அதிர்ச்சி வீடியோ
பீகார் மாநிலம் பாகல்பூர் ஸ்டேஷனிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஜெய்நகருக்கு செல்ல தயாராக இருந்தநிலையில் ரயில் புறப்பட்டு தண்டவாளத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது ரயிலின் வெளிப்புறத்தில் இருந்த வாலிபர் ஒருவர் கற்களை எடுத்து ஓடும் ரயிலின் ஜன்னலை பார்த்து வீசினார்.

இந்தக் கல் உள்ளே இருந்த பயணி ஒருவரின் மூக்கில் பட்டு ரத்தம் வழிந்தது. இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது கல்லை எடுத்து ரயிலின் மீது வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை கிழக்கு மத்திய ரயில்வே நிர்வாகம் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. மேலும் இந்த வாலிபரின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மத்திய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வீடியோ பார்க்க: