Mona Lisa by throwing soup in Louvre Museum in Paris மோனாலிசா ஒவியம் மீது சூப் ஊற்றி எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் வீடியோ
Mona Lisa by throwing soup in Louvre Museum in Paris பிரான்ஸ் தலைநகர் பாரீஸில்( Paris) உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் லியார்னடோ டா வின்சி 16ஆம் நூற்றாண்டில் வரைந்த உலகின் சிறந்த ஓவியங்களில் ஒன்றாக கருதப்படும் மோனாலிசா ஓவியம் உள்ளது
ஜனவரி 28ஆம் தேதி இந்த அருங்காட்சியகத்துக்கு வந்த இரண்டு பெண்கள் மோனாலிசா ஓவியத்தின் மீது சூப்பை வீசினர். பின்னர், உணவுப் பாதுகாப்பு தொடர்பான கோஷங்களை எழுப்பிய அவர்கள், கலை முக்கியமா அல்லது உணவு பாதுகாப்பு முக்கியமா என கேள்வி எழுப்பினார்.
இந்த செயலுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பான அமைப்பான ரிப்போஸ்டே அலிமெண்டேர் குழு பொறுப்பேற்றுள்ளனர். அருங்காட்சியக நிர்வாகம் சார்பில் ஓவியம் மீது பாதுகாப்பு கண்ணாடிகள் இருந்ததன் காரணமாக ஓவியம் சேதமாகவில்லை என்று அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 1950களின் தொடக்கத்தில் மோனாலிசா ஓவியம் மீது ஆசிட் வீசப்பட்டது. அதன் பின்னர், ஓவியம் பாதுகாப்பு கண்ணாடிக்கு பின்னால் வைக்கப்பட்டது. ஓவியத்தை பாதுகாக்க குண்டு துளைக்காத கண்ணாடி நிறுவப்பட்டுள்ளதாக கடந்த 2019ஆம் ஆண்டு அருங்காட்சியகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Mona Lisa by throwing soup in Louvre Museum in Paris
வீடியோ பார்க்க CLICK HERE
Climate activists targeted the Mona Lisa by throwing soup in Louvre Museum in Paris pic.twitter.com/aZVOhZIRJl
— Historic Vids (@historyinmemes) January 29, 2024