police chase and arrested accused 32 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியை சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீஸ் பரபரப்பான சிசிடிவி வீடியோ

32 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியை சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீஸ் பரபரப்பான சிசிடிவி வீடியோ
பெங்களூர் கொரட்டகெரே காவல் நிலைய எல்லையில் திருட்டு உட்பட 32 வழக்குகளில் தொடர்புடைய மஞ்சேஷ் என்ற பிரபல குற்றவாளியை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சினிமா பாணியில் துரத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
குற்றம் சாட்டப்பட்ட மஞ்சேஷ், கொரட்டகெரே நகரில் உள்ள ஒரு வீட்டில் சமீபத்தில் திருட்டுச் சம்பவம் ஈடுபட்டுள்ளார் . அவரை பிடிக்க, போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, வாகனங்களின் நடமாட்டத்தை ஆய்வு செய்தனர்.

விசாரணையில், மஞ்சேஷ், தும்கூருவில் இருந்து தாபஸ்பேட்டை, நெலமங்களா வழியாக பெங்களூரு சென்றது தெரியவந்தது. ஆகஸ்ட் 6ஆம் தேதி பெங்களூரு சதாசிவநகர் போக்குவரத்து சந்திப்பு அருகே மஞ்சேஷ் இருசக்கர வாகனத்தில் செல்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
சிக்னலில் நின்ற மஞ்சேஷை பிடிக்க விரைந்து செயல்பட்ட கான்ஸ்டபிள் தொட்டலிங்கய்யா அவனை தடுத்து நிறுத்த முயன்றார். இருப்பினும், குற்றவாலி மஞ்சேஷ் தப்பி செல்ல முயன்போது சுமார் 20 மீட்டர் தூரம் கான்ஸ்டபிள் தொட்டலிங்கய்யாவை இழுத்துச் சென்றான். இருந்தும் தன் பிடியை விடாமல் துணிச்சலாக செயல்ப்பட்ட கான்ஸ்டபிள் , போக்குவரத்து காவல் நிலைய பெண் ஏ.எஸ்.ஐ நாகம்மா, ஊர்க்காவல்படை ஸ்ரீதர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கைது செய்தார் .
கைது செய்யப்பட்ட மஞ்சேஷிடம் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 135 கிராம் எடையுள்ள, சுமார் 6.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில், மஞ்சேஷ், தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் முதியவர்களை குறிவைத்து, அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் வழங்குவது போல் நடித்து, அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது பின்னர் அவர்களிடம் நகைகளை கொள்ளையடிப்பது திருடிய பணத்தில் கோவா மற்றும் மங்களூருவில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதாக தெரிவித்தான்
கொரடகெரே, மதுகிரி, கோலாலா, பெங்களூர் சிட்டி, பெங்களூர் ரூரல், சிக்கபல்லாபூர் மற்றும் மைசூர் நகரம் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அவன் மீது 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,வெற்றிகரமாகக் அவனை கைது செய்துள்ளனர். இதில் போலீஸ் கான்ஸ்டபிள் தொட்டலிங்கய்யா முக்கிய பங்கு வகித்தார், அவரது துணிச்சலை பலர் பாராட்டி வருகின்றனர் .
பரபரப்பான சிசிடிவி வீடியோ: