pour ganga water on taj mausoleum தாஜ்மஹாலில் ஓம் ஸ்டிக்கர் ஒட்டி ஷாஜகான் மும்தாஜ் கல்லறையில் கங்கை நீரை ஊற்றிய நபர் வீடியோ வைரல்

தாஜ்மஹாலில் ஓம் ஸ்டிக்கர் ஒட்டி ஷாஜகான் மும்தாஜ் கல்லறையில் கங்கை நீரை ஊற்றிய நபர் வீடியோ வைரல்
ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜுக்காக கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் காதல் நினைவுச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.ஆனால் தற்போது சிலர் தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்பு இந்து கோவில் இருந்தது என்றும் அதனை இந்து மன்னர்கள் கட்டினார்கள் என்றும் கூறி வருகிறனர்.

இந்நிலையில் இரண்டு நபர்கள் சுற்றுலா பயணிகள் போல் தாஜ்மஹாலுக்குள் சென்று அவர்கள் கையில் கொண்டு வந்த கங்கை நீரை மும்தாஜ் மற்றும் ஷாஜகான் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் தெளித்தனர். பிறகு ஓம் என்ற ஸ்டிக்கரை தாஜ்மஹால் சுவற்றில் ஒட்டி உள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வினேஷ் சவுத்ரி மற்றும் ஷியாம் பாபு சிங் என தெரிய வந்துள்ளது இவர்கள் இருவரையும் மத்திய தொழிற்பனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்த போது தாஜ்மஹால் ஒரு இந்துக் கோவில் ‘தேஜோ மஹால்யா’ என்றும், அவர்கள் ஊற்றிய தண்ணீர் ‘கங்காஜல்’ என்றும் கூறி அவர்களின் செயலை புனிதம் என்று கூறியுள்ளனர்
மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரல் வீடியோ பார்க்க: