sewage pipe blast in china சீனாவில் வெடித்த கழிவுநீர் குழாய் சாலை மற்றும் வாகனங்கள் மீது பொழிந்த மனித மலம் மழை

சீனாவில் வெடித்த கழிவுநீர் குழாய் சாலை மற்றும் வாகனங்கள் மீது பொழிந்த மனித மலம் மழை
கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி காலை தெற்கு சீனாவில் நேனிங் பகுதியில் புதிதாக கழிவுநீர்க் குழாய் பொருத்தப்பட்ட நிலையில் , அதிகாரிகள் அந்த குழாயின் அழுத்த சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அழுத்தம் தாங்காமல் கழிவுநீர்க் குழாய் திடீரென வெடித்தது சிதரியது . இதனால் மனிதர்களின் மல கழிவுநீர் சுமார் 33 அடி உயரத்துக்கு மேல் நோக்கிச் சென்று, அதே வேகத்தில் கீழெ விழுந்தது .

அப்போது அந்த சாலை வழியாக சென்ற மனிதர்கள், இருசக்கர,மற்றும் 4 சக்கர வாகனங்கள் மீது மலக் கழிவுகள் விழுந்தன. மலம் கொட்டியதால், பல வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் இந்த மல மழை அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. உடனடியாக, மலக் கழிவுகள் சுத்தம் செய்யப்பட்டது
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ:
sewage pipe blast in china