Snake in ac coach of moving train ஓடும் ரயிலில் அதிர்ச்சி ஏசி கோச்சில் இருந்த 3அடி பாம்பு வைரல் வீடியோ

ஓடும் ரயிலில் அதிர்ச்சி ஏசி கோச்சில் இருந்த 3அடி பாம்பு வைரல் வீடியோ
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த, கரிப் ரத் (ஏழையின் தேர்) விரைவு ரயிலின் G – 17 பெட்டியில் மேல் பெர்த்தின் இரும்பு கம்பியைச் சுற்றி சுமார் 3அடி நீளமான பாம்பு ஒன்று படுத்து இருந்தது. பாம்பை பார்த்த பயணி ஒருவர் உடனே சக பயணிகளை எச்சரித்தார். பயணிகள் பயத்தில் அலற தொடங்கினர் இதையடுத்து, உடனே அந்த பெட்டியில் பயணித்த பயணிகள் அனைவரும் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர். பிறகு, அந்த பம்பும் ரயிலில் இருந்து அகற்றப்பட்டது. இந்த பாம்பு பயணிகளின் பொருட்களுடன் வந்ததா இல்லை எப்படி என்று தெரியவில்லை

ரயில் பெட்டியில் இருந்த பாம்பு பகலில் வெளிவந்ததால் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே இரவில் பயணிகள் தூக்கத்தில் இருக்கும்போது நடந்து இருந்தால் பயணிகளின் நிலை என்ன ஆகி இருக்கும் எனறு பயணிகள் ஆதங்கப்பட்டனர் .
இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க, ரயில்வேதுறை தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் வலலியுறுத்தியுள்ளனர்.