speedy car hits 3teens sitting on road சாலையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த 3 நண்பர்கள் மீது மோதிய கார் வைரல் வீடியோ

சாலையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த 3 நண்பர்கள் மீது மோதிய கார் வைரல் வீடியோ
உத்திரபிரதேசம் மாநிலம் ப்ருதாபாத் மாவட்டம், பதேகர் பகுதியில் வசிக்கும் 3 நண்பர்கள் , சாலையோரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று ,சாலையில் அமர்ந்து கொண்டு இருந்த மூவர் மீது மோதியது. சாலையில் மூண்றுபேர் இருப்பதை ஓட்டுநர் கவனித்தாலும் அதிவேகத்தின் கரணமாக உடனடியாக நிறுத்த முடியவில்லை.

இதனால் அந்த கார் மூவரின் மீதும் மோதியது. இதில் ஒருவர் சம்பவிடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
உடனே மூவரையும் மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவர்களில் ஒருவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல்லகி வருகிறது
வைரல் வீடியோ பார்க்க: