student boarding moving train and fell ஓடும் இரயிலில் ஏற முயன்ற மாணவி தவறி விழுந்து உயிர் தப்பிய பகீர் வீடியோ

ஓடும் இரயிலில் ஏற முயன்ற மாணவி தவறி விழுந்து உயிர் தப்பிய பகீர் வீடியோ
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து, புதுச்சேரி நோக்கி புதுச்சேரி எக்ஸ்பிரஸ்சில் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவரும் பயணம் செய்தார்.

இரயில் கண்ணூர் இரயில் நிலையத்தில் நின்றபோது , மாணவி இரயிலில் இருந்து இறங்கி கடையில் பொருள் வாங்கிக்கொண்டு இருந்தார்.ஆனால் அதற்குள் இரயில் புறப்பட, மாணவி அவசரமாக ஓடும் இரயிலில் ஏற முற்பட்டார்
அப்போது, கால் இடறியதால் இரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் மாணவி சிக்கி விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அலறவே, இரயில் நிறுத்தப்பட்டு மாணவி மீட்கப்பட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். மீட்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்
அந்த பகீர் சிசிடிவி காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது
வைரல் வீடியோ பார்க்க: