sunitha williams shares diwali wishes விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ் வைரல் வீடியோ

விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ் வைரல் வீடியோ
இந்தியா முழுவதும் வரும் 31ஆம் திகதி தீபாவளி பண்டிகையை யொட்டி ஏற்பாடுகள் கலை காட்டியுள்ள நிலையில் அமெரிக்கவில் ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

இந்திய வம்சாவளியை செர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தது அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்
விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுனிதா வில்லியம்ஸின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிரது அவரது அந்த வாழ்த்து வீடியோவில் – உலகம் முழுவதிலும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த வருடம் பூமியில் இருந்து சுமார் 260 மைல் தூரத்தில் விண்வெளி மையாயத்தில் இருந்து தீபாவளி கொண்டாடும் ஒரு அறிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
என் தந்தை தீபாவளி மற்றும் பிற இந்திய பண்டிகைகளைப் பற்றி எனக்கு எடுத்துரைத்து இந்திய கலாச்சாரத்தோடு என்னை வளர்த்துள்ளார் . எனவே விண்வெளியில் இருப்பினும் இந்திய பண்டிகையான தீபாவளியின் முக்கியத்துவத்தை உணர்கிறேன்” என பேசியுள்ளார்.
வைரல் வீடியோ பார்க்க: